Breaking News

காஞ்சிபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் - 414 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

காஞ்சிபுரம், செப்.2:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 414 கோரிக்கை மனுக்கள் ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் வழங்கப்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 414 மனுக்கள் பெறப்பட்டன.

அவை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உடனுக்குடன் தீர்வு காணுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

No comments

Thank you for your comments