வலது கால் செயலிழந்த நிலையில் சிறுமி - மருத்துவச் செலவுக்கு நிதியுதவி கேட்டு தாயார் மனு
காஞ்சிபுரம், செப்.2:
வலது கால் செயலிழந்த நிலையில் தனது 9 வயது பெண் குழந்தைக்கு மருத்துவச் சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு அச்சிறுமியின் தாயார் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.
காஞ்சிபுரம் ஸ்ரீவி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் பிரியா. இத்தம்பதியரின் 9 வயது பெண் குழந்தை லிஷியாவுக்கு பிறவியிலேயே இடது பக்க மூளையில் ரத்தம் தேங்கி நின்றதால் வலது கால் செயலிழந்து நடக்க முடியாமல் இருந்து வருகிறார்.
பெண் குழந்தை லிஷியாவின் தாயார் பிரியா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.அக்கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது.
குழந்தை பிறக்கும் போதே வலது கால் செயலிழந்திருந்தது. மருத்துவர்கள் இடது பக்க மூளையில் ரத்தம் தேங்கி நிற்பதால் தான் வலது கால் செயலிழந்துள்ளது என்று தெரிவித்தனர்.
பல மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தும் இதுவரை 30லட்சத்துக்கும் மேல் செலவாகியுள்ளது. மேலும் மருத்துவச் சிகிச்சை செய்ய போதுமான வசதி இல்லை. குழந்தைக்கு போதுமான மருத்துவச் செலவு செய்ய தகுந்த நிதியுதவி அளிக்குமாறும் அக்கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments
Thank you for your comments