காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் திறப்பு - காணிக்கை வரவு ரூ.32.93 லட்சம்
காஞ்சிபுரம், செப்.19:
அத்திவரதர் புகழுக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோயில். இக் கோயிலில் இருந்த 13 உண்டியல்கள் கடந்த 12.6.24 ஆம் தேதிக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டன.
இதில் ரொக்கமாக ரூ.32.93,980, தங்கம்}60 கிராமும்,வெள்ளி 230 கிராமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
No comments
Thank you for your comments