Breaking News

துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் பரபரப்பு பேட்டி

காஞ்சிபுரம்   

காஞ்சிபுரத்தில் வருகின்ற செப் 28ஆம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் பச்சையப்பன்  ஆடவர் கல்லூரி மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் தோழமைக் கட்சிகளை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் திமுக தலைவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து துறை அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். 


கூட்டத்தில் சுமார் 50,000 பேர் பங்கேற்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வுக்கு பின்னர் அவர் செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது :

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளைய துணை முதல்வராக ஆகும் வாய்ப்பு அறிவிக்கப்படலாம் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் அல்லது காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வராக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். 

ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ் பி  சண்முகம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் தொகுதி எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் தொகுதி  வக்கீல் ஏழிலரசன்,  மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன், 

ஒன்றிய செயலாளர்கள் பி எம் குமார், குமணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி, மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன், மாநகர நிர்வாகிகள் முத்து செல்வன் ,சுப்பராயன்,

பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், வெங்கடேசன், திலகர், சாட்சி சண்முகசுந்தரம், மாநகர நகராட்சி கவுன்சிலர்கள் கமலக்கண்ணன், த. விசுவநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர்இ. ஜாபர் பொன்னா(எ)  வெங்கடேசன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக முப்பெரும் பவள விழா நடைபெறும் இடத்தினை அமைச்சர் உள்ளிட்ட எம்பி எம்எல்ஏக்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

No comments

Thank you for your comments