சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்தும் (TEXPO 2024) தொழிற் கண்காட்சி -அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்
TIEMA (திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்), 2001 இல் நிறுவப்பட்டது, TIEMA திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையின் தொழில்துறை நிறுவங்களின் பிரதிநிதியாக செயல்படுகிறது. 360க்கும் மேற்பட்ட செயலில் உள்ள தொழில் நிறுவன உறுப்பினர்களுடன், TIEMA சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களின் நவீன மற்றும் ஆரோக்கியமுள்ள துடிப்பான சமூகத்தை உள்ளடக்கியது.
Also Read 🔥 ஆகஸ்ட் 8: பல விதமான துன்பங்கள் நீங்கும் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி ... வழிபாட்டு முறை மற்றும் நேரம்
TIEMA அதன் ஆற்றல் மிக்க முன் முயற்சிகளின் செய்லபாடுகளுக்கு பெயர் பெற்றது. 2019 இல் தொடங்கப்பட்ட TEXPO, விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பரஸ்பர நன்மைக்காக மைக்ரோ மற்றும் சிறு வணிக நிறுவனங்களை இணைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.TEXPO அறிமுகபடித்தியதின் காரணமாக குறு,சிறு தொழிலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. TIEMA இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை TEXPO நடத்த உந்து சத்தியாக செயல்படுகிறது. 2022-ஆம் ஆண்டின் இரண்டாவது TEXPO பதிப்பு OEM களுடன் மைக்ரோ தொழில்களை இணைப்பதில் கவனம் செலுத்தியது. TEXPO 2024, இன் முக்கிய நோக்கம் "உள்ளூர் தொழில் நிறுவனங்களுடன் ஒன்றாக வளருவோம் மற்றும் வளர்ச்சி அடைவோம்" என்ற கருப்பொருளின் கீழ் எதிர்கால வணிக வளர்ச்சிக்கான களத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
TEXPO 2024 தொழிற் கண்காட்சியை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தால் 3-வது முறையாக நடத்தப்படும் TEXPO - 2024 தொழிற் பொருட்காட்சியை தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்த தொழிற் பொருட்காட்சி 16,600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 183 அரங்குகள் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த கண்காட்சியில், வாங்குவோர் – விற்போர் சந்திப்பும் நடைபெறுகிறது. இந்தத் தொழில்பொருட்காட்சியில் OEM என்று அழைக்கப்படும் (Original Equipment Manufacturer) 60-க்கும் மேற்பட்ட உயர்தர தொழில் நிறுவனங்களுடன், சுமார் 6,000-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வருகை தர உள்ளனர். MSME தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதையும், வணிகத்தை மேம்படுத்திக் கொள்வதையும், நோக்கமாக கொண்டு இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
2022 –ஆம் ஆண்டு நடைபெற்ற TEXPO தொழிற் பொருட்காட்சியில் 130 MSME நிறுவனங்கள் பங்கு கொண்டனர். இந்த கண்காட்சிக்கு 4,000-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வருகை புரிந்தனர். இதன் மூலம் ரூ.300 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள MSME நிறுவனங்கள் வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் நடைபெறும் இதுபோன்ற கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு அரசு நிதியுதவி அளித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 288 நிறுவனங்களுக்கு ரூ.5.59 கோடி.
நிதியுதவியாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் பங்கு பெறும் MSME நிறுவனங்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையானது 201 ஏக்கர் பரப்பளவில் 400 தொழில் மனைகளுடன் தொடங்கப்பட்டு, பின்னர் 22.40 ஏக்கர் பரப்பளவில் 94 தொழில் மனைகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. குறுந்தொழில்களுக்காக 5.26 ஏக்கர் பரப்பளவில் 44 தொழில் மனைகளும், மகளிருக்காக 11.48 ஏக்கர் பரப்பளவில் 73 தொழில் மனைகளும் தனியாக வழங்கப்பட்டு, ஆக மொத்தம் 240.14 ஏக்கர் பரப்பளவில் 611 தொழில் மனை மற்றும் தொழிற்கூடங்களுடன் இந்த தொழிற்பேட்டை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்பேட்டைக்கு மேலும், சிறப்பு சேர்க்கும் வகையில் MSME தொழில் நிறுவனங்களின் உற்பத்தி தரத்தினை உலக அளவில் உயர்த்திடும் வகையில் ரூ.47.62 கோடி மதிப்பில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக, ரூ.18.17 கோடி செலவில் 5,730 சதுர அடி பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டு உயர் தொழில்நுட்ப பரிசோதனை கூடம், வடிவமைப்பு மையம், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய துல்லிய உற்பத்தி வசதிகள் நிறுவப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, மாண்புமிகு முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. கழக அரசு பொறுப்பேற்ற பின், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.5.21 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நுழைவு வாயில், சுற்றுச்சுவர், தெரு விளக்குகள், உயர் மின் கோபுர மின் விளக்குகள், சாலை பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 1970-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, குறு, சிறு, நடுத்தர தொழில்புரிவோருக்காக சிட்கோ தொழிற்பேட்டைகளை உருவாக்கினார். இன்று தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 507 ஏக்கர் பரப்பளவில் 15 ஆயிரத்து 127 தொழில் மனைகளுடன் 130 தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 3 லட்சம் நபர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
MSME தொழில்களின் வளர்ச்சிக்காக மாண்புமிகு முதல்வர் அவர்களால், கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 295 கோடி மதிப்பீட்டில், 512 ஏக்கர் பரப்பளவில் 8 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 248 ஏக்கர் பரப்பளவில் ரூ 115.53 கோடி மதிப்பீட்டில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், சேலம்,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், 8 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. குறுந்தொழில்கள் தொடங்கிட நகர்ப்புறங்களில் போதிய இடவசதி இல்லாததால், அவர்கள் உடனடியாக தொழில் தொடங்கிட அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டும் திட்டத்தின் கீழ் கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில், ரூ.158.62 கோடி மதிப்பீட்டில் 264 தொழில் கூடங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் கடந்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், அரிய கவுண்டம்பட்டியில் ரூ. 24.55 கோடிம் மதிப்பில் கொலுசு உற்பத்தியாளர்களுக்காக கட்டப்படும் அடுக்குமாடி தொழில் வளாகம் விரைவில் மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 4 இடங்களில், ரூ.183.96 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழில் கூடங்கள் கட்டப்பட்டு வருகிறது. MSME தொழில் நிறுவனங்களில் வெளியூரில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் குறைந்த வாடகையில் தங்குவதற்காக, சென்னை – அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ. 29.47 கோடி மதிப்பில் 800 தொழிலாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்ட தொழிலாளர் தங்கும் விடுதி கடந்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் – குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்கள் தங்கும் விடுதி ஒரிரு மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திறந்து வைக்கப்படும். இது போல், பல்வேறு திட்டங்கள் கழக அரசால் MSME நிறுவனங்களுக்காக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த பொருட்காட்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வுக்கு முன்னர் தமிழக அரசால் ரூ.18.17 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் துல்லிய உற்பத்தி குழுமத்தின் முதல் கட்ட பணிகளான உயர் தொழில்நுட்ப பரிசோதனை கூடம், வடிவமைப்பு மையம், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய துல்லிய உற்பத்தி வசதிகள் அமைக்கும் பணிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் MSME துறை, அரசு செயலர் திரு.அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப., சிட்கோ மேலாண்மை இயக்குநர்/ அரசு முதன்மை செயலர், திரு.கார்த்திக், இ.ஆ.ப., தொழில் வணிக ஆணையர் திரு.நிர்மல்ராஜ், இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, டான்ஸ்டியா தலைவர் திரு.சி.கே.மோகன், டைமா தலைவர் திரு.ரமேஷ் கண்ணா, திருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஏ.மணி, டைமா தலைவர் திரு.செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
Also Read 🔥 ஆகஸ்ட் 8: பல விதமான துன்பங்கள் நீங்கும் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி ... வழிபாட்டு முறை மற்றும் நேரம்
No comments
Thank you for your comments