Breaking News

08-08-2024ம் தேதி மேஷம் முதல் மீனம் வரையிலா ராசி பலன்கள்


  • இன்றைய முக்கிய விஷே நாள்

Also read  🔥  பல விதமான துன்பங்கள் நீங்கும்  நாக சதுர்த்தி நாள்

வழிபாட்டு முறை மற்றும் நேரம் 



மேஷம் (Aries)

எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் தேர்வுகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.

அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும். 

பரணி : ஈடுபாடுகள் அதிகரிக்கும்.

கிருத்திகை : இழுபறிகள் குறையும். 


ரிஷபம் (Taurus)

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளின் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.

கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.

ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும். 



மிதுனம் (Gemini)

மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சிறு மாற்றங்களைச் செய்வீர்கள். நீண்ட காலமாக இருந்துவந்த கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். தொழில் ரீதியான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பயனற்ற சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.

மிருகசீரிஷம் : மாற்றம் பிறக்கும்.

திருவாதிரை : விழிப்புணர்வு வேண்டும். 

புனர்பூசம் : குழப்பங்கள் நீங்கும். 


கடகம் (Cancer)

செயல்பாடுகளில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சிலருக்கு உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். சிரமம் விலகும் நாள்.

புனர்பூசம் : மாற்றமான நாள்.

பூசம் : தெளிவுகள் ஏற்படும். 

ஆயில்யம் : உதவிகள் சாதகமாகும்.


சிம்மம் (Leo)

தன தான்ய விருத்தி உண்டாகும். கமிஷன் சார்ந்த பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். பேச்சுத் திறமைகள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் எதிர்பாராத புதிய மாற்றம் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.

மகம் : சிந்தித்துச் செயல்படவும். 

பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

உத்திரம் : மாற்றங்கள் பிறக்கும்.


கன்னி (Virgo)

எண்ணிய எண்ணங்களை செயல்படுத்தி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

உத்திரம் : ஆதரவான நாள்.

அஸ்தம் : தாமதம் ஏற்படும்.

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.



துலாம் (Libra)

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். இனம்புரியாத கனவுகள் அவ்வப்போது ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தமான சூழ்நிலை மறையும். சுப காரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். சுகம் நிறைந்த நாள்.

சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.

சுவாதி : சுதந்திரம் மேம்படும்.

விசாகம் : பயணங்கள் கைகூடும். 


 விருச்சிகம் (Scorpio)

அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். தந்தை வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆராய்ச்சி தொடர்பான செயல்களில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். மேன்மை நிறைந்த நாள்.

விசாகம் : ஆதாயம் உண்டாகும். 

அனுஷம் : பயணங்கள் கைகூடும்.

கேட்டை : குழப்பங்கள் விலகும். 


தனுசு (Sagittarius)


கல்வி கற்கும் திறனில் வித்தியாசமான அணுகுமுறை ஏற்படும். குழந்தைகளிடம் அனுசரித்துச் செல்லவும். பணிகளில் இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் சாதகமாக அமையும். கௌரவ பொறுப்புகள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொதுமக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.  

மூலம் : வித்தியாசமான நாள்.

பூராடம் : மதிப்புகள் அதிகரிக்கும். 

உத்திராடம் : செல்வாக்கு மேம்படும்.  



மகரம் (Capricorn)

போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பாலின மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். கடன் கொடுப்பதில் சிந்தித்துச் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நற்செயல் நிறைந்த நாள்.

உத்திராடம் : வெற்றிகரமான நாள்.

திருவோணம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.

அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும். 



கும்பம் (Aquarius)

நகைச்சுவையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாக நிறைவேறும். மற்றவர்கள் கூறும் கருத்துகளில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களிடம் அனுசரித்துச் செல்லவும். போட்டி சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் தடுமாற்றம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.  

அவிட்டம் : பேச்சுக்களை குறைக்கவும்.

சதயம் : அனுசரித்துச் செல்லவும். 

பூரட்டாதி : தடுமாற்றமான நாள்.



மீனம் (Pisces)

நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குழந்தைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அரசு பணிகளில் கவனத்துடன் செயல்படவும். அன்பு நிறைந்த நாள்.

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் விலகும். 

ரேவதி : எண்ணங்கள் கைகூடும். 


No comments

Thank you for your comments