கட்டாய கல்வி உரிமை சட்டத்தை முறையாக நிறைவேற்ற வேண்டி கோரிக்கை!
கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே அமைந்திருக்கும் தனியார் அரங்கில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அவர் தெரிவித்ததாவது,
மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கல்வி உரிமை சட்டத்தை முறையாக நிறைவேற்ற பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பாக தனியார் பள்ளிகளின் இயக்குனர் டாக்டர் எம் பழனிச்சாமி அவர்கள் பதில் அறிக்கை தாக்கல் செய்தார்.இந்த வழக்கு வருகின்ற திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது தமிழ்நாடு அரசின் அறிக்கையை பார்க்கும் போது கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முழுவதுமாக முடக்குகின்ற முயற்சியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது என்பதுதெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.நமது கோரிக்கைகள் என்னவென்றால் CBSE ICSE உள்ளிட்ட அனைத்து பாடத்திட்ட பள்ளிகளையும் தமிழ்நாடு அரசின் சேர்க்கை இணையதளத்திற்குள் கொண்டு வரவேண்டும், பள்ளியிலிருந்து மாணவர்களின் வசிப்பிடத் தொலைவு ஒரு கிலோமீட்டருக்கு உள்ளாக இருக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்தும் இடங்கள் மீதி இருப்பின் வசிப்பிடத் தொலைவை அதிகரித்து மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க வேண்டும்.ஆனால் தமிழக அரசின் அறிக்கையில் இருந்து நாம் புரிந்து கொள்வதுமா ணவர்களின் இருப்பிடங்களுக்கு அருகில் அரசு பள்ளிகள் இல்லாத நிலையில் மாணவர்களின் இருப்பிடம் சேர்க்க விரும்பும் பள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் இருந்தால் மட்டும் அதிலும் சிபிஎஸ்சி ஐசிஎஸ்சி பள்ளிகளை தவிர்த்து மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மட்டும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் சேர இயலும் இந்த விதிகளை அமல்படுத்தும் போது ஒரு சதவீத மாணவர்களுக்கு குறைவாக மட்டுமே தனியார் பள்ளிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைமை உருவாகிவிடும்.
தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 4வது குறிப்பில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 6 முதல் 14 வயதுவரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே தனியார் பள்ளிகளில் சேர்க்கை வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்வதாக தெரிவித்து இருக்கிறார்கள் சட்டத்தைப் பற்றி எந்த தெளிவும் இல்லாமல் சட்டத்தை முறையாக படிக்காமல் கூட ஒரு மாநில அரசு செயல்படுகிறது என்பது இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009இல் விதி 11 இல் குறிப்பிட்டு உள்ளபடி மூன்று வயதிலிருந்து ஆறு வயது குழந்தைகளுக்கு இலவசமாக முன் பருவ மழலையர் கல்வியை கொடுப்பதும் அரசின் கடமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2019 -20 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 23,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் 2,381 பள்ளிகளில் மட்டும் முன்பருவ மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட்டன இந்த பள்ளிகளும் கூட முறையான ஆசிரியர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது கடந்த ஐந்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை அங்கன்வாடிகளில் முறையான தரமான ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படுகின்றது. அங்கன்வாடிகளில் கல்வி தரம் எல்கேஜி யுகேஜி கல்வி பயில்வதுடன் சமமாக இருக்கிறதா என்று சென்னை உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பி உள்ளது.கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 15 ஆண்டுகள் கழித்தும் 10 சதவீத மாணவர்களுக்கு கூட முன்பருவ கல்வி அளிக்க அரசு கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை அரசால் இயலாத நிலையில் RTE சட்டப்படி தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பையும் தமிழ்நாடு அரசு புதிய விதிகளை உருவாக்கி கெடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் தமிழ்நாட்டில் 90 சதவீத தொடக்கப் பள்ளிகளிலும் மழலையார் கல்வி எல்கேஜி ,யுகேஜி தொடங்கப்படாத நிலையில் அரசு பள்ளிகள் அருகில் இருந்தால் தனியார் பள்ளிகளில் சேர்த்க தேவை இல்லை எனக் கூறுவது சரியானது அல்ல. RTE சட்டப்படி வாய்ப்பிருந்தும் தமிழ்நாடு அரசின் புதிய விதியால் அந்த வாய்ப்பு பறிபோகிறது.வசதியுள்ள மாணவன் எந்த பள்ளியில் வேண்டுமானாலும் சேரலாம் எவ்வளவு தொலைவாக இருந்தாலும் விரும்பும் பள்ளியில் சேரலாம் எந்த வயதிலும் சேரலாம் ஆனால் வசதி இல்லாத மாணவனை இங்கு தான் சேர வேண்டும் என கட்டாயப்படுத்துவது கல்வி உரிமைக்கு எதிரானதாக கருதுகிறோம்.
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேரும் உரிமை அந்த பள்ளியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் உள்ள மாணவர்களுக்கு மட்டும் உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது RTE சட்டப்படி எந்த இடத்திலும் இதுபோல குறிப்பிடப்படவில்லை தமிழ்நாடு அரசின் அறிக்கையில் பிரிவு 5 அருகாமை பள்ளிகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்கள் RTE சட்டம் 2009 CHAPTER 3 ஆறாவது பிரிவில் மாணவர்களின் வசிப்பிடத்திலிருந்து அருகாமையில் பள்ளிகளை உருவாக்குவது அரசின் கடமை என்று சொல்லப்படுகிறது தொடக்கப்பள்ளிகள் ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கும் நடுநிலைப்பள்ளிகள் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளும் அரசு உருவாக்க வேண்டும் என்பது தான் இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அருகமை பள்ளிகள் விதிகள் கடைபிடித்தால் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள் தனியாக பணம் கட்டி சேரும் மாணவர்கள் என அனைவருக்கும் அருகமை பள்ளிகள் சட்டத்தை கொண்டு வர வேண்டும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு மட்டும் அருகாமை பள்ளிகள் என்ற நிலையை உருவாக்குவது ஒருவரை வஞ்சிப்பதாகும்
அரசாணைக்கும் சுற்றறிக்கைக்கும் உள்ள முரண்பாடு.தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 66 (7/4/2017)-ல் இணைப்பு ஒன்றில் இரண்டாவது பாகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளில் முழுமையாக இடங்களை பூர்த்தி செய்ய வசிப்பிடத் தொலைவை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அரசாணையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே அரசாணை மேற்கோள் காட்டி வந்த சுற்றறிக்கையில் 2434 / ஏ4 / 2024 dated 02/04/2024 மட்டும் வசிப்பிடத் தொலைவை ஒரு கிலோமீட்டருக்கு உள்ளாக இருக்க வேண்டும் என மாற்றி அமைப்பது தவறானதுஅரசாணையில் மாற்றம் செய்யாமல் சுற்றறிக்கையில் மட்டும் மாற்றம் செய்தது முறையான நடவடிக்கை அல்ல இது அரசின் வெளிப்படை தன்மையை சந்தேகப்படுத்துகிறது.ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் 717/2023 // 07 12 2023 மற்றும் wp no 14913 / 2024 மற்றும் 14910/2024 ஆகிய மூன்று வழக்குகளின் தீர்ப்பிலும் வசிப்பிடத் தொலைவை காரணம் காட்டி சேர்க்கை மறுக்கக்கூடாது என தெளிவாக உத்தரவு வந்துள்ளது.சிபிஎஸ்சி பள்ளிகளின் கல்வியாண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை இருப்பதாகவும் மாநில பாடத்திட்ட கல்வி ஆண்டு ஜூன் முதல் மே வரை இருப்பதாகவும் அதனால் சிபிஎஸ்சி ஐசிஎஸ்சி பள்ளிகளை சேர்க்க இயலவில்லை அதனால் அவர்கள் சேர்க்கை இணையதளத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை எனவும் அரசே தெரிவிக்கிறது.கட்டாய கல்வி உரிமை சட்டம் என்பது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்து தான் இயற்றப்பட்டுள்ளது எந்த பாடத்திட்ட மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கவில்லை, பன்னிரண்டாம் வகுப்பு முடிந்ததும் மருத்துவம் பொறியியல் ,விவசாயம் என அனைத்து படிப்புகளுக்கும் தனித்தனியாக சேர்க்கை நடத்த முடிகிறது என்றால் இதில் ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லைநடைமுறை பிரச்சனைகளுக்காக ஒரு சட்டத்தையே அமுல்படுத்த மாநில அரசு மறுப்பது மிகப்பெரிய குற்றமாகும்.தமிழ்நாடு அரசு தனது அறிக்கையில் 14வது பிரிவில் தெரிவித்துள்ளபடி சேர்க்கை காலத்தை அதிகப்படுத்துவது கல்வி ஆண்டு தொடங்குவதற்கும் பள்ளிகளுக்கு பணம் கொடுக்க கணக்கிடுவதற்கும் காலதாமதம் ஆகிவிடும் என்பதால் அது இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.சிபிஎஸ்சி ஐசிஐசி பள்ளிகள் மாநில பாடத்திட்ட கல்வி ஆண்டுக்கு முன்பே தொடங்கி விடுவதாக தெரிவித்துள்ளார்கள் அதனால் மே மாதம் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் சேர்க்கையை எப்போதும் போல நடத்துவதால் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை தமிழ்நாடு அரசின் அறிக்கையில் எட்டாவது பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல சிபிஎஸ்சி ஐசிஐசி பள்ளிகள் கட்டணம் நிர்ணயக் குழு அறிவுரையை ஏற்று கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை எனவும் அதனால் அவர்கள் RTE சட்டத்தை அமல்படுத்த மறுக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட பிறகுதான் RTE சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணம் அல்லது (SEC 12(2)) ஒரு மாணவனுக்கு அரசு பள்ளிகளில் செலவழிக்கும் தொகை இதில் எது குறைவானதோ அதனை அரசு அந்த பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு செலுத்த வேண்டும் எந்த சூழ்நிலையிலும் அரசு பள்ளி மாணவனுக்கு செலவழிக்கும் தொகை விட அதிகமாக தனியார் பள்ளிகளுக்கு தர வேண்டியதில்லை என சட்டம் சொல்கிறது மேலும் அரசு கேட்டால் அனைத்து தகவல்களையும் பள்ளிகள் தர வேண்டுமென sec 12(3) சட்ட விதிகள் சொல்லுகிறது அதனால் பள்ளிகள் வாங்கும் கட்டணத்தை ஒப்பிட்டு அந்த பள்ளிகளுக்கு கட்டணத்தை அரசே செலுத்தி விட முடியும் எனது வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த சிபிஎஸ்சி வாரியமும் இந்த சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரமும் பணியும் தனது அல்ல என்றும் இது சம்பந்தப்பட்ட அரசிற்கான அதிகாரம் என்றும் தெரிவித்துவிட்டது.தனது கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு cbse icse பள்ளிகளில் இந்த சட்டத்தை அமல்படுத்த வைப்பதற்கு மாநில அரசு ஏன் முயற்சி எடுக்கவில்லை இந்த சட்டம் இயற்றப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகும் அனைத்து பள்ளிகளையும் இந்த சட்ட வரையறுக்குள் கொண்டுவர இயலவில்லை என மாநில அரசு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது இது சட்டப்படி குற்றமானதும் கூட கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நிலை நாட்டுவதற்கு அரசின் பொறுப்பு பிரிவு 8 உள்ளாட்சி நிர்வாகத்தின் பொறுப்பு பிரிவு 7 பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் பொறுப்பு பிரிவு 10 தனியார் பள்ளிகளின் பொறுப்பு சேப்டர் 4 ஆகியவை இந்த சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் டெல்லி மற்றும் ஆந்திர அரசுகளில் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் போல கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
No comments
Thank you for your comments