விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடியில் உள்ள வாகை மலரின் சிறப்புகள் என்ன?
வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. "வெற்றி வாகை சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது
2000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நிலத்தில் வாகை மலர் இருந்து வருகிறது. சங்க காலத்தில் போர் புரிபவர்கள் வெற்றியின் அடையாளமாக வாகை மலரை சூடி வருவார்கள். எனவே வாகை மலர் வெற்றியின் குறியீடாக பார்க்கப்படுகிறது.
போர்புரிய சென்ற தலைவன் திரும்பி வரும்போது கழுத்தில் அணிந்து வரும் மலர் மாலையை கொண்டே போரின் நிலையை அறிவர். வாகை மலர் அணிந்து வந்தால் வெற்றி பெற்றவர் என கருதப்படுவர்.
வாகை மலர் குறித்து சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பல புலவர்கள் பாடியுள்ளனர். வரலாற்றுடன் இணைத்திருந்தாலும் வாகை மரங்கள் சூழலியலுக்கும் முக்கியமானவை. கடல் மட்டத்தில் இருந்து 800 அடி உயரத்தில் வளரும் முல்லை திணை மரம் இது.
வாகையின் பூவும், மரத்தின் வேரும், மற்ற பல பகுதிகளும் சித்த மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பூக்கள் பூக்கும் காலங்களில் வாகையை தேடி தேனீக்களும் பூச்சிகளும், பறவைகளும் கூட்டம் கூட்டமாக வருவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
பூ பூக்கும் நாளில் பல்லுயிர் பெருக்கத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய வாகை மரத்தை சமவெளி பகுதிகளிலும் நட்டு வளர்க்கலாம். நிழலுடன் கூடவே மருத்துவத்திற்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் இவை பெரிதும் உதவும் என்றார்.
சிறப்புகள்
- வாகை மலர்ச்சூடுதல் வெற்றிக்களிப்பை உணர்த்தும்.
- வீக்கம், கொப்புளம் வடிதலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.
- இருமல், நுரையிரல் அழற்சி, ஈறழற்சி ஆகியவற்றிற்கு இவை மருந்தாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக இம்மரப்பட்டையை அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
- இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையனவாக கருதப்படுகின்றது. வாகை வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்று.
- தமிழீழத்தின் தேசிய மரமாகும்.
No comments
Thank you for your comments