Breaking News

கோவில், பள்ளிவாசல் இடையே தினந்தோறும் வழிந்தோடும் கழிவு நீர் - பொதுமக்கள் கடும் அவதி




 காஞ்சிபுரம் :

கோவில், பள்ளிவாசல் இடையே தினந்தோறும் வழிந்தோடும் கழிவு நீரால்  அப்பகுது குடியிருப்பு வாசிகளும் பக்தர்களும் கடும் அவதி 

நாளுக்கு நாள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் கவுன்சிலர் உடன் சாலை மறியலில் ஈடுபட்டால் பரபரப்பு

 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 34வது வார்டு காந்திலையில் உள்ள தேரடி தெரு அருகே பிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் கோவிலும், மிகப்பெரிய பள்ளிவாசலும் உள்ளது. தினந்தோறும் கோவில் மற்றும் பள்ளிவாசலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர்.

இதில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகவே குடியிருப்பு வாசிகள் அப்பகுதியில் செல்லும் கழிவுநீர் வடிகால் பகுதியில் கசிவு ஏற்பட்டு சாலை முழுவதும் முழங்கால் அளவிற்கு கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாக மாநகராட்சி நிர்வாகத்துடன் பலமுறை புகார் அளித்துள்ளனர். 

மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மட்டும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவி காய்ச்சல் மற்றும் உடனார் குறைவால் அவ்வப்போது மருத்துவமனைக்கு செல்வதாக குற்றச்சாட்டி உள்ளனர். 

பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 34 ஆவது வார்டு கவுன்சிலர் பிரவீன் குமார் உடன் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரமாக காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

தகவல் அறிந்து வந்த விஷ்ணு காஞ்சி போலீசார் போராட்டக்காரர்களிடம் பேசி இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் அங்கிருந்து கலந்து சென்றனர்.

கோவில், பள்ளிவாசல் பழமையான வரதராஜ பெருமாள் கோயில் தேர் போன்ற புராதனமாக இருக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்கி வருவதால் அங்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே முகசுலிப்பை ஏற்படுத்துகிறது

No comments

Thank you for your comments