காஞ்சிபுரம் குளிர்பானக் கடையில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
காஞ்சிபுரம், ஆக.13:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் குளிர்பானம் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தது தொடர்பாக காஞ்சிபுரம் குளிர்பானக் கடையில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்.கூலித்தொழிலாளியான இவரது 2வ மகள் காவ்யாஸ்ரீ(5)அக்கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவ நாளன்று இவர் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள குளிர்பானக் கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்ட சில மணி நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
சிறுமி காவ்யாஸ்ரீ உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.
சிறுமியின் தந்தை ராஜ்குமார் காஞ்சிபுரம் ரயில் நிலைய சாலையில் உள்ள குளிர்பானக்கடையில் குளிர்பானம் வாங்கி சாப்பிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் அனுராதா உத்தரவின்படி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உணவுப் பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து குளிர்பானங்களை சோதனைக்கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
No comments
Thank you for your comments