Breaking News

அய்யன்பேட்டை நெகிழி அரவைக்கூடத்தில் ஆட்சியர் ஆய்வு



படவிளக்கம்: அய்யன்பேட்டை ஊராட்சியில் செயல்பட்டு வரும் நெகிழி அரவைக் கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன்

காஞ்சிபுரம், ஆக.13:

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யன்பேட்டையில் செயல்பட்டு வரும் நெகிழி அரவைக் கூடத்தினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யன்பேட்டையில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் நெகிழிக்கழிவு மேலாண்மை அலகு ஆகியனவற்றின் சார்பில் ரூ.5.50லட்சம் மதிப்பில் நெகிழி அரவைக் கூடம் செயல்பட்டு வருகிறது.

இந்த அரவைக் கூடத்தினை ஆட்சியர் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அதே அய்யன்பேட்டை மற்றும் நாயக்கன்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லக் குடியிருப்புகளையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனையடுத்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் குருகுலம் பெண் குழந்தைகள் இல்லத்தில் ஆய்வு செய்து மதிய உணவு சாப்பிடும் மாணவியரிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். 

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,செயற்பொறியாளர் அருண் ஆகியோர் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும் உடன் இருந்தனர்


No comments

Thank you for your comments