Breaking News

பழங்குடியின பெண்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி முகாம் நிறைவு - சான்றிதழ்களை வழங்கினார் காஞ்சிபுரம் எஸ்பி



படவிளக்கம்: பயிற்சி பெற்ற மாணவிக்கு சான்றிதழ்களை வழங்கிய காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம்

காஞ்சிபுரம், ஆக.8:

பழங்குடியினப் பெண்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சார்பில் நடைபெற்று வந்த தற்காப்புக் கலை பயிற்சி முகாம் நிறைவு விழாவில் எஸ்பி கே.சண்முகம் கலந்து கொண்டு வியாழக்கிழமை சான்றிதழ்களை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சார்பில் ஓரிக்கை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏகனாம்பேட்டையில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளிலும் பயிலும் பழங்குடியினப் பெண்கள் 80 பேருக்கு கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக்கலைகள் கற்றுத் தரப்பட்டன. 

கடந்த 20 நாட்களாக நடந்து வந்த இந்த தற்காப்புக்கலை பயிற்சி முகாம் நிறைவு விழா ஓரிக்கையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் நிறைவு விழாவிற்கு தலைமை வகித்து பயிற்சி பெற்ற மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.ஏடிஎஸ்பி க்கள் பாலகுமாரன்,மார்ட்டின் பிரேம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏடிஎஸ்பி சார்லஸ் ராஜதுரை வரவேற்று பேசினார்.பயிற்சி பெற்ற மாணவியர் கூட்டாகவும், தனியாகவும் அவரவர்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

நிகழ்வில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்திகாவியா, மகளிர் நீதிமன்ற அரசு வழக்குரைஞர் சசிரேகா,ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன மேலாளர் மோகனவேலு ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments