அரசு பேரறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவு கூட்டுறவு சங்க தலைமை விற்பனை நிலையத்தை தனியார் பட்டு சேலை நிறுவனம் கையகப்படுத்தியதை கண்டித்து ஆர்பாட்டம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பட்டு சேலை விற்பனை நிலையமாக விளங்கும் காந்தி சாலையில் 500க்கும் மேற்பட்ட பட்டு சேலை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு சார்பில் 22 கூட்டுறவு கைத்தறி நெசவு பட்டு சேலை விற்பனை சங்கங்கள் இயங்கி வருகின்றனர்,
இந்நிலையில் அரசு கூட்டுறவு பட்டு சேலை விற்பனை நிலையங்கள் 53 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுக்கு ரூ.16 கோடி ரூபாய் லாபம் ஈட்டக்கூடிய முதன்மையாக விளங்கும் அரசு கூட்டுறவு சங்கங்களே ஒரே கூட்டுறவு சங்கமாக இயங்க வரும் பேரறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த விற்பனை நிலையம் வாடகைக்கு இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.11 ஆயிரத்திற்கு மாத வாடகை செலுத்தி வருகிறது,
இந்தக் கூட்டுறவு சங்கத்தில் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உறுப்பினராக இந்த கூட்டுறவு சங்கத்தை நம்பி பட்டு சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல தனியார் பட்டு சேலை நிறுவனமான பாபுசா நிறுவனம் காந்தி சாலையில் உள்ள பல்வேறு அதிக விலை கொண்ட இடங்களை வேற எந்த ஒரு நபரும் பெரிய விற்பனை நிறுவனம் வாங்காத அளவிற்கு பெரிய இடங்களை விலைக்கு வாங்கி கையகப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் அரசு கூட்டுறவு சங்கங்களில் விற்பனை அதிக அளவில் நடைபெறும் அண்ணா கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தை இடத்தின் உரிமையாளரிடம் அதிக தொகை கொடுத்து அந்த இடத்தை விலக்கி வாங்கி மாதம் ரூபாய் 11000 வாடகை செலுத்தி வந்த நிலையில் தற்பொழுது அந்த விற்பனை கடைக்கு ரூ. 4.8 லட்சம் வாடகை செலுத்த வேண்டுமென நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்,
ஏற்கனவே நெசவாளர்கள் வாழ்வாதாரம் அகல பாதாளத்திற்கு சென்று உள்ள நிலையில் தற்போது விற்பனை செய்யப்படும் அண்ணா பட்டு கூட்டுறவு விற்பனை நிலையத்தை தனியார் நிறுவனம் விலைக்கு வாங்கி அதிக வாடகை செலுத்துவதை கண்டித்து காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் அருகே 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தமிழக அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரறிஞர் அண்ணா பெயரில் உள்ள அரசு கூட்டுறவு சங்கத்தை தமிழக அரசு மீட்டுத் தர வேண்டும் என நெசவாளர்கள் ஆர்பாட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்
No comments
Thank you for your comments