காஞ்சிபுரத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனம் - ஆட்சியர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம், ஆக.3:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
வடகிழக்குப் பருவமழையின் போது மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் நிலையை உயர்த்தும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தையும் பேரணியையும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
விழிப்புணர்வு வாகன பேரணியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)சத்யா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்வராஜ், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments