Breaking News

பர்னிச்சர்ஸ் கடையின் பூட்டு உடைத்து திருட்டு சம்பவம்...

காஞ்சிபுரம் அருகே வையாவூர் சாலையில் கனகராஜ் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக KKR FURNITURE என்ற பெயரில் பாத்திரம், பர்னிச்சர்ஸ், எலக்ட்ரான்ஸ், பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். 


இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல வியாபாரத்தை முடித்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு  சென்றுள்ளார். 

இதற்கிடையில், இன்று காலை கடையை திறந்து கல்லாப்பெட்டியை பார்க்கும் பொழுது நேற்று இரவு வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50,000 பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சடைந்தார்.  

கடையின் பூட்டு உடைக்கப்படாமல், கடையில் இருந்த பணம் கொள்ளை போனது பற்றி குழம்பிப் போன கடையின் உரிமையாளர்  கனகராஜ், பின்பு கடையில் இருக்கும் சிசிடிவி காட்சியை பார்த்தபோது

இன்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கடை அருகே இருக்கும் சிறிய வழியில் உள்ளே புகுந்து முதலில் சிசிடிவி கேமராவை உடைக்க முற்பட்டது தெரியவந்தது. 

அதன் பின்னர் கேமராவை உடைக்க முடியாததால் விரக்தியில் இருந்த பலே திருடன், கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 50 ஆயிரம் ரொக்கத்தை லாபகமாக எடுத்துச் செல்லும் சிசிடிவி பதிவை பார்த்து உரிமையாளர் அதிர்ந்து போனார். 

இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசார் சிசிடிவி கட்சியை வைத்து 50 ஆயிரத்தை திருடி சென்ற பலே திருடனை தேடி வருகின்றனர். 

எப்போதும் பரபரப்பாக உள்ள இந்த சாலையில், பிரபல வீட்டு உபயோக பொருள்கள் விற்கும் கடையில், பணம் கொள்ளை போனது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments