ஸ்ரீ கருக்கினில் அமர்ந்தவள் கோயில் அம்மன் ஆலயத்தில் விளக்கு பூஜை
ஆடிபூரம் ஒட்டி ஸ்ரீ கருக்கினில் அமர்ந்தவள் கோயில் அம்மன் ஆலயத்தில் உலக நன்மைக்காக 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ கருக்கினில் அமர்ந்தவள் கோயில் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி பூரம் ஒட்டி விளக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.
கோவிலில் இன்று ஆடிபுரத்தை ஒட்டி விளக்கு கடை சார்பில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், திருவிளக்கு பூஜை, மஞ்சள் காப்பு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று ஆடிப்பூரத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் விளக்கு கடை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டில் உலக நன்மைக்காக வேண்டி கொண்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டவர்.
விளக்கு பூஜை ஒட்டி ஸ்ரீ கருக்கினில் அமர்ந்தவள் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை காண திரளான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
No comments
Thank you for your comments