போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மாணவர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், இன்று (12.08.2024) போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில், காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ/மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட நிகழ்வினை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, விழிப்புணர்வு பேரணியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி.சண்முகம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments