கிறிஸ்து அரசர் மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை அருகில் அமைந்துள்ள ஒன்னிப்பாளையம் பிரிவு கிறிஸ்து அரசர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் தி ஐ பவுண்டேஷன் மருத்துவ குழுவினர்கள் வாயிலாக நடைபெற்றது. இலவச கண் பரிசோதனை முகாமிற்கு பள்ளியின் நிர்வாகி அருட்தந்தை அ.லூர்துசாமி எம்.எம்.ஐ., பள்ளியின் முதல்வர் ம.கலைச்செல்வி மற்றும் தி ஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் மருத்துவ குழுவினர்கள் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ,மாணவியர்களும், ஆசிரியப் பெருமக்களும் மற்றும் பள்ளியில் பணிபுரியும் நிர்வாக பணியாளர்களும் கலந்துக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்டனர். முகாமில் சிறப்பாக நடத்தி கொடுத்த தி ஐ பவுண்டேஷன் நிறுவனத்திற்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துகளையும் பாரட்டுகளையும்,தெரிவித்துக் கொண்டனர்.
No comments
Thank you for your comments