மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப.,மற்றும் துணைமேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இக்கூட்டத்தில் மேயர் அவர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 54 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு,இறப்பு சான்றிதழ்கள்,சாலைவசதி, மின்விளக்குகள்,குடிநீர் வசதி,பாதாள சாக்கடை,தொழில்வரி,சொத்துவரி, காலியிடவரி,புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம்,மருத்துவம்,சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 7 மனுக்களும்,மேற்கு மண்டலத்தில் 9 மனுக்களும்,வடக்கு மண்டலத்தில் 9 மனுக்களும்,தெற்கு மண்டலத்தில் 6 மனுக்களும்,மத்திய மண்டலத்தில் 15 மனுக்களும்,பிரதான அலுவலகத்தில் 8 மனுக்களும் ஆகமொத்தம் 54 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் கா.ரங்கநாயகி இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.முன்னதாக,மத்திய மண்டலம் வார்டு எண்.48க்குட்பட்ட காந்திபுரம். பி.கே.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த குணசேகரன் அவர்கள், குடிநீர் வரி, முகவரி மாற்றம் தொடர்பாக அளித்த கோரிக்கை மனுவின் மீது உடனடி நடவடிக்கையாக முகவரி மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணையினை மேயர் அவர்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில்,மாநகர நல அலுவலர் (பொ)மரு.கே.பூபதி,நகரமைப்பு அலுவலர்குமார்,உதவி முத்துசாமி (கிழக்கு)ஆணையர்கள் சந்தியா(மேற்கு)செந்தில்குமரன்(மத்தியம்)ஸ்ரீதேவி (வடக்கு)இளங்கோவன் (தெற்கு)(பொ)மோகன சுந்தரி(நிர்வாகம்), உஷாராணி(கணக்குகள்),மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
No comments
Thank you for your comments