கோடையில் சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மக்களுக்கு சிறுவாணி அணையில் இருந்து பல பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க மிகவும் உதவும் அணை சிறுவாணியாகும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாராளமாக கொட்டித்தீர்த்தது சிறுவாணி அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வந்தது. இதனால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கேரள பாசன அதிகாரிகள் சிறுவாணி அணை நிரம்புவதற்குள் அணையில் இருந்து வீணாக தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். கோடைக்காலத்தில் கோவையில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த கோடை காலத்தில் சிறுவாணியின் நீர்மட்டம் 9 அடியாக சரிந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் சிறுவாணியில் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த மாதம் நீர்மட்டம் 40 அடியை எட்டியது. விரைவில் முழு கொள்ளளவான 49 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்தபோது, கேரள நீர்ப்பாசன துறை மூலம் அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை காரணம் காட்டி, கேரளத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் முழு கொள்ளளவை எட்ட விடாமல் கேரள நீர்ப்பாசனத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கேரள பாசன அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கேரள பாசன அதிகாரிகள் வேண்டுமென்றே இது போன்ற குசும்பு வேலையில் ஈடுபடுவதாக சமூக அலுவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி அணையின் முழு கொள்ளளவை எட்டும் முன்பே தண்ணீர் திறக்கப்படுவதால் கோடை காலத்தில் கோவைக்கு சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments