கோவை அன்னூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
கோவை :
கோவை மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம், கரியாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கரியாம்பாளையம் காரேகவுண்டன்பாளையம், பிள்ளையப்பம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு "மக்களுடன் முதல்வர்" முகாம் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அன்னூர் திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மு.தனபாலன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர்/ தாட்கோ மேலாளர் கு.மகேஸ்வரி கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் கரியம்பாளையம் வி.செல்வி, காரே கவுண்டன்பாளையம் தங்கராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த முகாமில் 15க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத்துறைகளைச் சேர்ந்த மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். நிகழ்விற்கு மாவட்ட கவுன்சிலர் இ.ஆனந்தன், மாவட்டத் திமுக துணைச் செயலாளர் எம்.என்.கே.செந்தில், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.நடராஜன் முன்னிலை வகித்தார்கள்.
இந்த முகாமில் கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா சுமன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், வட்டாட்சியர் குமரி ஆனந்த், துணை வட்டாட்சியர் ரேவதி, தெய்வபாண்டியம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள், திமுக தெற்கு ஒன்றிய மாணவரணி நிர்வாகி வர்ணம் பிரகாஷ், ஊராட்சி செயலர்கள் நாச்சிமுத்து, வசந்த கோகிலா, செந்தில்குமார், சதீஷ், பிரகாஷ், ஈஸ்வரன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments