Breaking News

காஞ்சிபுரத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி - எஸ்பி தொடக்கி வைத்தார்

படவிளக்கம்: காஞ்சிபுரத்தில் போலீஸ்:பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்து, வெற்ற பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய எஸ்பி கே.சண்முகம்

காஞ்சிபுரம், ஆக.3:

காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை காவல்துறை மைதானத்தில் சனிக்கிழமை போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளை எஸ்பி. கே.சண்முகம் தொடக்கி வைத்ததோடு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.


காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறையின் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ஓட்டம், கயிறு இழுத்தல், கைப்பந்து,கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டிகள் தொடக்க விழாவிற்கு துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமை வகித்தார்.

ஆயுதப்படை ஆய்வாளர் ஜஸ்டின் ஸ்டான்லி முன்னிலை வகித்தார்.

காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் கலந்து கொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தார்.

நிறைவாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும்,சான்றிதழ்களையும் வழங்கினார்.

No comments

Thank you for your comments