Breaking News

தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி

வேலூர் மாவட்டம் நேதாஜி மைதானத்தில் நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தேசிய கொடியை  ஏற்றி வைத்து  11  பயனாளிகளுக்கு ரூ.19,59,048/-  மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 



வேலூர் மாவட்டம் நேதாஜி மைதானத்தில் இன்று (15.08.2024)  நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி  தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.



தொடர்ந்து, சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்கள் பறக்கவிட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவரசு குடும்பத்தினர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

பின்னர் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.19,59,048/- மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை வழங்கி அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய 587 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, 6 பள்ளிகளை சார்ந்த  மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காலை 8.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

காவல் துறை அணிவகுப்பு மரியாதை

வேலூர் நேதாஜி மைதானத்தில் நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்   வே.இரா.சுப்புலெட்சுமி,   தேசிய கொடியை ஏற்றி வைத்து திறந்தவெளி வாகனத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மதிவாணன், அவர்களுடன் காவல் துறை அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்தல்

வேலூர் நேதாஜி மைதானத்தில் நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாலை அணிவித்து கௌரவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.4,25,000/- மதிப்பில் டிராக்டரும்,  வேளாண்மைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு விவசாய இடுப்பொருட்கள் ரூ.3,570/- மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கு பிரத்யேமாக வடிகமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்  2 பயனாளிகளுக்கு ரூ.2,09,478/- மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் நிரந்தர பந்தல் அமைத்தல் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின்கீழ் மா ஒட்டுச்சொடி என 2 பயனாளிகளுக்கு ரூ.1,59,000/- மதிப்பிலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் புதிய தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் (NEEDS) JCB  வாடகை மற்றும் தோல் பொருட்கள் என 3 பயனாளிகளுக்கு ரூ.11,62,000/- மதிப்பிலும் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.19,59,048/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.   


 பாராட்டுச் சான்றிதழ்

வேலூர் மாவட்ட சரகத்திற்குட்பட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 66 நபர்களுக்கு மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் நற்சான்றுகள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.மேலும் வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் காணாமல் போன குழந்தையை 24 மணிநேரத்தில் மீட்ட காவல்துறையின் 17 நபர்களுக்கும், தீயணைப்பு- மீட்புப்பணித்துறையில் 8 நபர்களுக்கும்,  வனத்துறையில் 4 நபர்களுக்கும், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 108 நபர்களுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 1 நபருக்கும், விஐடி பல்கலைக்கழகத்தில் 1 நபருக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 15 நபர்களுக்கும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 13 நபர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் 4 நபர்களுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம், மாவட்ட குடும்ப நல செயலகத்தில் 12 நபர்களுக்கும், துணை இயக்குநர் (தொழுநோய்) அலுவலகத்தில் 3 நபர்களுக்கும், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் 4 நபர்களுக்கும், மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தில் 4 நபர்களுக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையில் 2 நபர்களுக்கும், சித்த மருத்துவத்தில் 4 நபர்களுக்கும், வருவாய்த்துறையில் 35 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 30 நபர்களுக்கும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 27 நபர்களுக்கும், நில அளவை பதிவேடுகள் துறையில் 5 நபர்களுக்கும், போக்குவரத்துத்துறையில் 8 நபர்களுக்கும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் 18 நபர்களுக்கும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் 3 நபர்களுக்கும், விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத் துறையில் 1 நபருக்கும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 10 நபர்களுக்கும், வேளாண் பொறியியல் துறையில் 4 நபர்களுக்கும், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தன்னார்வலர்களில் 5 நபர்களுக்கும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பணிபுரியம் 3 நபர்களுக்கும், கால்நடை பராமரிப்புத்துறையில் 5 நபர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறையில் 36 நபர்களுக்கும், யோகா ஆசிரியர்கள் 17 நபர்களுக்கும், பொதுப்பணித்துறை கட்டடத்துறையில் 3 நபர்களுக்கும், நெடுஞ்சாலைத்துறையில் 3 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 5 நபர்களுக்கும், செய்தி மக்கள் தொடர்பு துறையில் 3 நபர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2 நபர்களுக்கும், பொதுப்பணித்துறையில் (மின்சாரம்) 3 நபர்களுக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 16 நபர்களுக்கும், மின் ஆளுமை முகமை சார்பில் 9 நபர்களுக்கும், தொடக்கக்கல்வி சார்பில் 45 நபர்களுக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 12 நபர்களுக்கும், மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் பணிபுரிந்த கணினி இயக்குபவர்கள் 2 நபர்களுக்கும், முன்னோடி வங்கித்துறையில் 3 நபர்களுக்கும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் 8 நபர்களுக்கும்  என பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 583 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி  பாராட்டு சான்றிதழ்களை  வழங்கினார்.                

கலை நிகழ்ச்சிகள்

நேதாஜி மைதானத்தில் நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் பிரம்மபுரம்  சிருஷ்டி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியில் 150 மாணவ, மாணவிகளும், லத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 125 மாணவிகளும், செயின்ட்மேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகளும், சத்துவாச்சாரி ஹோலிக்கிராஸ் செவித்திறன் குறைபாடு உடையோர் பள்ளியில் 65 மாணவ, மாணவிகளும், கீ.வ.குப்பம் சாய் குருஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 130 மாணவ, மாணவிகளும், கொசப்பேட்டை ஈ.வெ.ரா. நாகம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 மாணவிகளும் என   6 பள்ளிகளை சார்ந்த 690  மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பள்ளி மாணவ மாணவிகளின் சிறந்த கலை நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் பரிசு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் .கார்த்திகேயன், மாநகராட்சி மேயர்  சுஜாதா ஆனந்த குமார், துணை மேயர்  மா.சுனில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, மாநகராட்சி ஆணையாளர்  ஜானகி ரவீந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலவலர்  சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இராமசந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  முத்தையன், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு)  இராஜ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்  திருகுணஐயப்பத்துரை, வருவாய் கோட்டாட்சியர்கள்  இரா.க.கவிதா, செல்வி சுபலட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வி உமா, மாவட்ட வழங்கல் அலுவலர்  சுமதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments