தேசியக் கொடியுடன் பாஜகவினர் இருசக்கர வாகனத்தில் பேரணி
- காஞ்சிபுரத்தில் தேசியக் கொடியுடன் பாஜகவினர் இருசக்கர வாகனத்தில் பேரணி
- காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு முக்கிய சாலை வழியாக இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது
இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் பைக் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டது. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதிகளிலும் இந்த பைக் பேரணியை நடத்தவும் பாஜக முடிவு செய்திருந்தது.
மாவட்ட தலைநகரங்களில் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து பாஜக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , பாஜகவினருக்கு பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எடுத்து இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைநகரங்களில் , பாஜக சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் , காஞ்சிபுரத்தில் இன்று தேசியக் கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மரியாதை செலுத்திய பாஜகவினர் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகனத்தில் பேரணி மேற்கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த பாஜகவினர் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சேக்கி மாலை அணிவித்து தங்களது பேரணியை நிறைவு செய்தனர்.
பாஜகவினர் பேரணையின் பொழுது பாரத் மாதா கி ஜே , ஜெய்ஹிந்த் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
பாஜகவின் பேரணியை முன்னிட்டு , போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது . இந்தப் பேரணியில் 100க்கும் மேற்பட்ட வாகனத்தில் பாஜகவினர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments