Breaking News

காஞ்சி சங்கர மடத்தில் முப்பெரும் விழா


படவிளக்கம் : மரபிசை பயிற்சியை முடித்தவர்களுக்கு பட்டயச்சான்றிதழ்  வழங்கிய முனைவர் அருணை.பாலறாவாயன்

காஞ்சிபுரம், ஆக.6-

காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் திருவிளையாடற் புராண தொடர் சொற்பொழிவு துவக்க விழா, சைவ சித்தாந்த பட்டய வகுப்புகள் தொடக்க விழா மற்றும் மரபிசை பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சி காமகோடி பீடத்தின் சமய.சமுதாய பண்பாடு மற்றும் கலாச்சார சேவை அமைப்பான இந்து சமய மன்றத்தின் சார்பில் திங்கள்கிழமை தோறும் காலை 10 மணிக்கு திருவிளையாடற்புராணம் தொடர் சொற்பொழிவு தொடக்க விழா, சங்கரா கல்லூரி சார்பில் சனிக்கிழமை தோறும் இணையம் வாயிலாக நடத்தப்படும் 

சித்தாந்தம் என்ற பட்டயப்படிப்பு தொடக்க விழா, மற்றும் கல்லூரியில் கடந்த ஆண்டு தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பஜனைப் பாடல்கள் உள்ளிட்ட மரபிசை பயிற்சியை முடித்த 80 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஆகியன சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தலைமையில் நடைபெற்றது.

சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் ஜெ.ராதாகிருஷணன் வரவேற்று பேசினார்.

முனைவர் அருணை.பாலறாவாயன் கலந்து கொண்டு மரபிசை பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.நிறைவாக சங்கரா கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் தெய்வசிகாமணி நன்றி கூறினார்,.


No comments

Thank you for your comments