காரமடை நகர கழக திமுக சார்பில் டாக்டர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி !
கோவை மாவட்டம் காரமடை கார் ஸ்டாண்ட் அருகில் காரமடை நகர திமுக கழக செயலாளர் இரா.வெங்கடேஷ் தலைமையில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் பா.அருண்குமார் முன்னிலையில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆறாவது நினைவு நாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலையிட்டு மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் உடன் நகர திமுக நிர்வாகிகள் பா.சு.மணி, அரவராஜ், பி.கே.பழனிச்சாமி, அன்வர் பாஷா, குமாரசாமி, குட்டி (எ) கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், ஶ்ரீதர், பூபதி, இளைஞர் அணி பத்ரி, அரவிந்த், தினேஷ் மற்றும் கோவை வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல்ல புள்ளையா அணி துணை தலைவர் பன்னீர்செல்வம் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments