கோவை மாவட்டம் காரமடை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி !
கோவை :
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை கிழக்கு ஒன்றியம், பெள்ளாதி ஊராட்சி பகுதியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம், திமுக மாவட்ட பிரதிநிதி ஆண்டவர் முருகேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஓடந்துறை தங்கவேல், பெள்ளேபாளையம் பிரஸ்குமார், சின்ன கள்ளிப்பட்டி ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் கலைஞர் அவர்களின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு மலர் மாலையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து பெரியார், அண்ணா, கலைஞர் புகழை போற்றி கோசங்கள் எழுப்பி நிகழ்ச்சி நிறைவுற்றது.
உடன் பெள்ளாதி நசீர், கனகராஜ், அவைத்தலைவர் எஸ்.பி.சரவணன், ஆலயம் பாலு மற்றும் கிழக்கு ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments