Breaking News

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர் பதவி கிடைக்குமா? - சட்டமன்ற உறுப்பினர்கள் புலம்பல்

 திருவள்ளூர் :

திருவள்ளூர் மாவட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருப்பதால் அமைச்சரவை மாற்றம் ஏற்படுவதாக தகவல்கள் கசிந்து வருகின்றனர்.


இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்று திருவள்ளூர் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக நாசர்  நியமனம் செய்யப்பட்டார் இதைத்தொடர்ந்து இவருக்கு அமைச்சர் பதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அழகு பார்த்தார். 

இந்நிலையில், அவர் மீது பல்வேறு பல்வேறு புகார்கள் சென்றது.  தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில்,  பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு மே 2023ல் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்காமல் ராணிப்பேட்டையை சேர்ந்த காந்தி சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  அமைச்சர் காந்திக்கு, பொறுப்பு திருவள்ளூர் மாவட்டத்தை வழங்கினார் 

கடந்த ஓராண்டுக்கு மேலாகியும், இன்று வரை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்யாததால் பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் புலம்பி வருகின்றனர்.

சிலர் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகுதி இல்லையா? என்று கூட கேள்வி எழுப்பி  வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? அல்லது மீண்டும் நாசர் அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? என்று  கழக தொண்டர்களுடன் பொதுமக்களும்  ஏக்க பெருமூச்சுடன் காத்திருக்கின்றனர்..


No comments

Thank you for your comments