இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு குவிந்த சித்தேரிமேடு கிராம பொதுமக்கள்
காஞ்சிபுரம், ஆக.5:
காஞ்சிபுரம் அருகே சித்தேரி மேடு கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் அருகே சித்தேரி மேடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது..
சித்தேரி மேடு கிராமத்தில் கடந்த 6 தலைமுறைகளாக 300 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருகிறோம்.குடியிருக்கும் இடத்திற்கு வீட்டு மனைப் பட்டா கேட்டு பல முறை வருவாய்த்துறையினரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குடியிருக்கும் இடத்திற்கு இலவச வீட்டு மனைப் பட்ட வழங்க வேண்டும் அல்லது சித்தேரி மேடு கிராமத்திலேயே சமத்துவபுரம் அருகில் உள்ள காலியான இடத்தில் வீட்டு மனைப்பட்டாவாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
படவிளக்கம்: இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த சித்தேரி மேடு கிராம பொதுமக்கள்
No comments
Thank you for your comments