Breaking News

கைத்தறி நெசவாளி கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் மூன்றாம் திருவிழா மண்டபம் பகுதியில் அன்பு - பாக்கியலட்சுமி தம்பதியினர் வாடக வீட்டில் நெசவுத்தொழில் செய்து கொண்டு வசித்து வருகின்றனர். 


அன்பு என்பவர் காஞ்சி பட்டு கைத்தறி நெசவு செய்யும் தொழில் செய்து வருகிறார் இவர் கடன் வாங்கி ஆருத்ரா நிதி நிறுவனத்தில்  லாபம் பெற ஆசையில் பணத்தை முதலடி செய்து ஏமாந்து உள்ளார். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்த அன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

இதனை அறிந்த அவருடைய மனைவி அதிர்ச்சியில் ஆழ்ந்து கூச்சல் இட்ட போது அக்கம்பக்கத்தினர் தகவல் அறிந்து காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர்.

 பின்னர், காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

நெசவு தொழிலாளி பணத்தின் மீது மோகத்தினால்  ஆங்காங்கே கடன் பெற்று முதலீடு செய்து பெரும் நஷ்டத்திற்கு உண்டாகி கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Thank you for your comments