முத்தியால்பேட்டை ஸ்ரீ மூலஸ்தம்மன் கோயிலில் ஆடித் திருவிழா
படவிளக்கம் : ஆடித் திருவிழாவையொட்டி நாக தேவதை அலங்காரத்தில் வீதியுலா வந்த உற்சவர் மூலஸ்தம்மன்
காஞ்சிபுரம், ஆக.5:
காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மூலஸ்தம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடித் திருவிழாவையொட்டி உற்சவர் மூலஸ்தம்மன் நாகதேவதை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை கிராமத்தில் பழமையான ஸ்ரீ மூலஸ்தம்மன் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான 24வது ஆண்டுக்குரிய ஆடித்திருவிழாவையொட்டி மூலவருக்கும், உற்சவருக்கும் காலையில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் உற்சவர் மூலஸ்தம்மன் நாகதேவதை அலங்காரத்தில் கிராமத்தின் முக்கிய வீதிகளில் மங்கல மேள வாத்தியங்களுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏற்பாடுகளை முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் விழாக்குழுவினர், ஆலய நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments