Breaking News

ஊறுகாய் கேட்ட இளைஞரை, சரமாரியாக தாக்கிய ஹோட்டல் ஊழியர் - ரத்த வெள்ளத்தில் இளைஞர்

காஞ்சிபுரம் :

ஊறுகாய் கேட்ட இளைஞரை, சரமாரியாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்   

ரத்த வெள்ளத்தில் இருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த டிஆர்ஓ  





காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  , முனியாண்டி விலாஸ் என உணவகம் செயல்பட்டு வருகிறது.‌ இந்த உணவகத்தை மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த உணவகத்தில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.‌

காஞ்சிபுரம் பல்லவன் நகர் பகுதியில் சேர்ந்த தனசேகர் என்பவர் உறவினர் ஒருவரின், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியில் அலுவலகம் அருகே வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனசேகர் ‌ முனியாண்டி விலாஸ் கடைக்குச் சென்று வெஜ் ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளார். 

தனசேகர் சாப்பிட ஆரம்பித்த பிறகு வெஜ் ரைஸ் சரியாக இல்லை என கூறி ஊறுகாய் தொட்டுக்கொள்ள கேட்டுள்ளார். இதனை அடுத்து ஓட்டலில் இருந்த ஊழியர்கள் ஊறுகாய் தர மறுத்து அதற்கு பதில் , சாஸ் கொடுப்பதாக கூறியுள்ளார்கள். 

கேட்பதை கொடுங்கள் இல்லையென்றால் வேண்டாம் என தனசேகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.‌ அப்பொழுது ஊழியர்கள் தனசேகர் குடித்திருப்பதாகவும் குடித்துவிட்டு போதையில் உளறுவதாக சண்டையிட்டுள்ளனர் ‌ 

ஊழியர்கள் பணமில்லாமல் சாப்பிட வந்துவிட்டு ஏன் இப்படி அலப்பறை செய்கிறாய் என தனசேகரை கேட்ட பொழுது, யாரிடம் பணம் இல்லை என தனசேகர் பணத்தை தூக்கி வீசி உள்ளார். இதனால் கோபம் அடைந்த ஊழியர்கள் மற்றும் அங்கு பரோட்டா போட்டுக் கொண்டிருந்த மாஸ்டர் பரோட்டா போட பயன்படுத்தும் கரண்டியை பயன்படுத்தி தனசேகரை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான தனசேகர் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு , ரத்தம் வெளியேறியது‌.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் குவிந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே இந்த கடை நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்திருந்ததால் , கூடுதல் போக்குவரத்து ஏற்பட்டது 

அப்பொழுது அவ்வழியாக சென்ற மாவட்ட  வருவாய் அலுவலர் வெங்கடேசன் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார் . மேலும் ரத்த வெள்ளத்தில் துடித்திருந்த தனசேகரை மீட்டு ஆட்டோ மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து இருதரப்பினரையும் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக இந்த பிரச்சனை நடைபெற்ற பொழுது அந்த கடையின் உரிமையாளர் மனைவி, சாலையில் இறங்கி மிகவும் தகாத வார்த்தைகளில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாலையில் கடையை வைத்துக் கொண்டு, என் கடையை மூடி விடுவீர்களா என சவால் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







No comments

Thank you for your comments