பூம்புகாரில் கிருஷ்ண தரிசனம் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது
பூம்புகார் கைவினைப் பொருள்கள் உலகில் தனி ஒரு இடத்தை பிடித்துள்ளது. பூம்புகார் என்ற பெயரால் அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம் 1973-ல் துவக்கப்பட்டு உண்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் பல கண்காட்சிகளை நடத்தி வருவதை போல இந்த ஆண்டு கிருஷ்ண தரிசனம் கண்காட்சி மற்றும் விற்பனையை 13.8 .2024 முதல் 31. 8. 2024 முடிய தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி முடிய பூம்புகார் விற்பனை நிலையம் 1239, பெரிய கடை வீதி கோவையில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
இக்கண்காட்சியில் கிருஷ்ணரின் திரு உருவம் கொண்ட பஞ்சலோகம், பித்தளை, சந்தன மரம், கரும்பு மற்றும் வெள்ளை உலோக சிலைகள், தஞ்சை ஓவியங்கள், காகிதக் கூழ்,களிமண் பொம்மைகள், கொண்ட பள்ளி பொம்மைகள், நூக்கமர உற்பத்தி வேலைப்பாடு, துணியில் வரைந்த ஓவியங்கள் மற்றும் எண்ணற்ற பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இக்கண்காட்சியில் விற்பனைக்கு உள்ள கைவினைப் பொருட்களை கோவை மாநகர மக்கள் வாங்கி பயன் பெறுவதுடன் கலைப் பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழிவகுக்கும் என்று கண்காட்சி மேலாளர் ஆனந்தன் அவர்கள் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments