குட்டையூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் இலவச மருத்துவ முகாம் !
கோவை மாவட்டம், காரமடை நகராட்சி குட்டையூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை நகர மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
திமுக நகர கழக செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர் ராம்மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் சுதாகர், மருத்துவ அலுவலர் மனோஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன், வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் கோவிந்தசாமி, சுகாதார மேற்பார்வையாளர்கள், 18 வகையான மருத்துவத் துறையினர் கலந்து கொண்டார்கள். இம்முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆலோசனையுடன் கூடிய விரைவு நடவடிக்கைகளை பற்றி மருத்துவர்கள் கூறினார்கள்.
No comments
Thank you for your comments