கோவை மாநகராட்சி 7வது வார்டு பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு.. கோவில் நிர்வாகிகள் மீது ஸ்ரீதரன் புகார்....
கோவை மாநகராட்சி 7வது வார்டு பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு கோவில் நிர்வாகிகள் மீது ஸ்ரீதரன் என்பவர் புகார்....
சென்னை உயர்நீதிமன்ற உத்திரவை கண்டுகொள்ளாத அதிகாரிகள் என்று அடுக்கடுககாக புகார்கள் கூறும் அப்பகுதியில் வசிக்கும் ஸ்ரீதரன்... 25 கோடி சொத்து மதிப்பு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கோவில் நிர்வாகிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை...
கோவை மாநகராட்சி 7வது வார்டுக்குட்பட்ட ராமலட்சுமி நகர் பகுதியில் ஐஸ்வர்யா ரெசிடன்சியில் வசிக்கும் ஸ்ரீதரன் என்பவர் கூறுகையில் வீரியம் பாளையம் செல்லும் 50 அடி பிரமாதமான சாலையில் சுமார் 145 அடி நீளம் 35 அடி அகலத்திற்கும் அதிகமாக கோல்டு வின்ஸ்லிருந்து வீரியம்பாளையம் செல்லும் சாலையில் ராமலட்சுமி நகர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து ஸ்ரீதரன் கூறுகையில் சாலை ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது என்று பலமுறை அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்தேன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத தால் 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன் . மேலும் முதலமைச்சரின் தனிபிரிவிற்கும் மனு அனுப்பினேன்.
அதற்கு மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில் மேற்படி சாலையில் 35700 சதுர அடி ஆக்கிரமப்பில் 21800 அடி ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.... ஆனால் மீண்டும் சிறிது நாட்கள் கழித்து அதே பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்....
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கோவில் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் மனுவை விசாரணைக்கு ஏற்காமல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது .மேலும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க மறு உத்தரவு பிறப்பித்தது.
ஆனாலும் மேற்படி உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் போது 7வது வார்டு கவுன்சிலர் கோவிந்தராஜன் மற்றும் கோவில் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆகிரமிப்பு அகற்றும் பணிகளை தடுத்து விடுகின்றனர்.
எனவே 2024 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமார் 25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அரசு அதிகாரிகள் மீட்டெடுக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக கூறினார்...
மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்துள்ளேன் . மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்...
No comments
Thank you for your comments