காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக 54ஆவது தடகள போட்டி
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக 54ஆவது காஞ்சிபுரம் மாவட்ட இளையோருக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் திரு பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் அவர்களது தலைமையில் துவங்கியது.
இதில் பொன்னம்பலம் குவாரி உரிமையாளர் திரு பொன்னம்பலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். சுமார் 600 மேர்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கு கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர் .
60மீ, 100மீ, 200மீ, 400மீ, 800மீ மற்றும் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப் பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டடது.
விழாவில் கடந்த ஆண்டு மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு , அவ்ர்களை ஊக்கப் படுத்தும் விதமாக பரிசு தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு விளையாட்டு வீரர்களுக்கு மாவட்ட அளவில் பரிசுத்தொகை வழங்கப்பட்டு, ஊக்குவிக்கப்படுவது நமது மாநிலத்தில் இதுவே முதல் முறையாகும்


No comments
Thank you for your comments