Breaking News

ஆக.13-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்



சென்னை: 

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறவுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். 

அமெரிக்கா செல்லும் முதல்வர் கூகுள் நிறுவன செயல் அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. 

இதில் முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும். மேலும், பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Thank you for your comments