Breaking News

விவசாயிகளுக்கு வேளாண் கடன் வழங்கல்

காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு   ரூ.5.27 இலட்சம் மதிப்பிலான வேளாண் கடன் மற்றும் மானியத்துடன் கூடிய வேளாண் இடுப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற  விவசாயிகள்  நலன்  காக்கும்  நாள்  கூட்டம்  மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி .கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (19.07.2024) நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக் கலைத் துறை,  கூட்டுறவுத் துறை,  வருவாய்த் துறை,  ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த  கூட்டத்தில்  கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன்  காக்கும்  நாள்  கூட்டத்தில், வையாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 7  விவசாய பயனாளிகளுக்கு  ரூ.3,67,740/- பயிர்க்கடன்களும், முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 4 விவசாய பயனாளிகளுக்கு ரூ.1,44,000/- மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடன்களும், வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில், 5  விவசாய பயனாளிகளுக்கு  ரூ.15,670/- மதிப்பிலான (நேரடி நெல் விதைப்பு கருவி, மண்புழு உர படுக்கை, தக்கை பூண்டு விதை) போன்ற வேளாண் இடுப்பொருட்களும் மாவட்ட  ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், கூட்டுறவு துறை மண்டல  இணை  பதிவாளர்  திருமதி.பா.ஜெயஸ்ரீ,  வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.ரா.ராஜ்குமார்  மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய  பெருமக்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments