Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்




காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், குப்பை, கழிப்பறை உள்ளிடவைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதை கண்டித்தும் தாலுகா அலுவலகம் எதிரே பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

காஞ்சிபுரம் பெருநகராட்சி இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக 51 வார்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்று பெரும்பான்மையாக திமுக கவுன்சிலர் வெற்றி பெற்று திமுக முதல் மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்நிலையில் மேயர் கணவர் யுவராஜ் தலையீடு அதிகமாக இருப்பதாக கூறி அக்கட்சியின் திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக போர் கொடி தூக்கி வரும் 29ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. 

இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், மேயர் கணவர் யுவராஜ் தலையீடு காரணமாக குப்பை, குடிநீர், மழைநீர் வடிகால், கழிவு நீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகளின் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் பாபு தலைமையில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உலக வங்கியில் கடனாக பெறப்பட்ட ரூ.1330 கோடி கடன் பெற்று மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் கழிவு நீர் வடிகால் போன்ற பணிகளில் 637 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி நடைபெறாமல் முறைகேடு ஏற்பட்டதாக கூறியும், 

மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்தியேகமாக நடைபாதை கடை வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட நடைபாதை கடை பெட்டியை மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பதற்கு மேயர் கணவர் யுவராஜ் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கண்டித்தும், 

மேலும் வரும் 29ஆம் தேதி மேயர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவதை கைவிட்டு மாநகராட்சி நிர்வாகத்தை கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கையும்,

மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆளுங்காட்சி கவுன்சிலர்கள் முறைகேடில் பங்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் மேயருக்கு எதிராக திரும்பி உள்ளதாகவும் கூறி பல்வேறு முறைகேடுகளை எடுத்துரைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு கண்டித்தும் மாநகராட்சி நிர்வாக கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments