Breaking News

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம்  வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு,  2024-2025ஆம் நிதி ஆண்டில், ரூபாய் 1000/- முதல் ரூபாய் 25000/- வரை,  கல்வி உதவித்தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


1) https://scholarships.gov.in  என்கிற,  தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு (OTR) மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

2) ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மையவங்கி அமைப்பு என்ற தொழில் நுட்ப முறையில், தங்களுடைய சேமிப்புக் கணக்கானது, தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்கவேண்டும்.  

3) விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய  சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.

4) இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்கவேண்டும்.

5)  கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாகும். பதிவு  செய்யப்படாத பள்ளிகள், மற்றும் கல்லூரிகள்,  https://scholarships.gov.in  என்ற,  தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், முதலில் பதிவு செய்தல்வேண்டும். 

பின்பு, மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்கவேண்டும்.  

ஒருவேளை, கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல், அடுத்தகட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில்,  அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது.

1 ம் வகுப்புமுதல்10 ம் வகுப்புவரைபயிலும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31/08/2024. மற்றஅ னைத்து உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31/10/2024.

மேற்கொண்டு விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு அணுகவும்:-

மத்திய நல ஆணையர் அலுவலகம், 

தொழிலாளர்நலஅமைப்பு,

தரைத்தளம்,  சிட்கோ நிர்வாக கிளை அலுவலகவளாகம், 

திரு.வி.க.தொழில் பூங்கா,  கிண்டி, 

சென்னை- 600032. 

மின்னஞ்சல்-wclwo.chn-mole@gov.in

தொலைபேசிஎண்: 044-29530169 

இணையதளம்  : https://scholarships.gov.in 

No comments

Thank you for your comments