Breaking News

திருவள்ளூரில் மின் விநியோக நிறுத்தம் அறிவிப்பு

திருவள்ளூர் :

திருவள்ளூர் கோட்டத்தைச் சேர்ந்த 110/33-11 கிலோ வோல்ட்  குஞ்சலம்  துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 06.07.2024 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை ஒதப்பை இன்டஸ்ட்ரியல் ஏரியா, பென்னலூர்பேட்டை, சீத்தஞ்சேரி, கச்சூர், அம்ம்ம்பாக்கம், திம்மபூபாலபுரம், பிளேஸ்பாளையம், அல்லிக்குழி, கூனிபாளையம் பகுதிகளுக்கும்  மின்நிறுத்தம்  நிறுத்தப்படும்  என செயற் பொறியாளர் ஆர்.கனகராஜன் தெரிவித்துள்ளார்.




இதேபோன்று, திருவள்ளூர் கோட்டம் -திருவள்ளூர் 110/33 - 11கேவி துணை மின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு  பணிகள் மற்றும் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படயிருப்பதால் 06.07.2024 அன்று காலை 09.00 மணி முதல் 15.00 மணி வரை திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஜெ.என்.சாலை (இரயில் நிலையம் முதல் எல்ஐசி வரை) பூங்கா நகர் ஐ.ஆர்.என். பின்புறம், புங்கத்தூர், போளிவாக்கம்,  மணவாளநகர், பட்டரை,  சேலை,  ஏகாட்டூர்,  அதிகத்தூர்,  வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர், நுங்கம்பாக்கம், ராஜாஜீபுரம்,  பெரியகுப்பம், ஒண்டிகுப்பம், இராமஞ்சேரி, பாண்டூர்,  பட்டரை பெரும்பத்தூர் மற்றும் இராமஞ்சேரி துணை மின் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் சு.கனகராஜன் தெரிவித்துள்ளார்.



No comments

Thank you for your comments