தனது அலுவலகத்தை வெளிப்புறமாக சுற்றிப் பார்த்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், தனது அலுவலகத்தில் வெளிப்புறத்தை சுற்றிப் பார்த்து பராமரிப்பு இல்லாமலும் புதர்கள் மண்டி இருந்ததை கண்டு, உடனடியாக புதர்களை அகற்றி அங்கு சீர் செய்து செடிகளை வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதைதொடர்ந்து திடீரென்று 12 மணி அளவில் சிறு பணிகளாக இருந்தாலும் பணிகள் சரியான முறையில் செயல்படுகிறதா என்பதை சுற்றிப் பார்த்து ஆராய்ந்து வேலை செய்யும் நபரை அழைத்து எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் நேராக அலுவலகத்துக்குள் வந்து அவருடைய அறையில் சென்று ஏசியை போட்டுக் கொண்டு தங்கள் பணிகளை தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் சில அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக நம் பணிபுரியும் அலுவலகம் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து வேலைகளையும் தானாகவே நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்களை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.
இதுபோல் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அலுவலகத்தை சுற்றியுள்ள இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டனர்.
No comments
Thank you for your comments