Breaking News

“புதுமைப்பெண் திட்டத்தால்” உயர்கல்விக்கு செல்லும் மாணவிகள் எண்ணிக்கையும் அதிகரிப்பு- ஆட்சியர் தகவல்

“புதுமைப்பெண் திட்டத்தில்" காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இத்திட்டம் மூலம் 6569 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்.  அதோடு இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் உயர்கல்விக்கு செல்லும் மாணவிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று    மாவட்ட ஆட்சித்தலைவர்  கலைச்செல்வி மோகன்  தெரிவித்துள்ளார். 

 சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினை, கல்வி கற்ற பெண்களால் மட்டுமே உருவாக்க இயலும், அந்த வகையில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்டதே (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம்) புதுமைப்பெண் திட்டமாகும்.

இத்திட்டம் மூலம் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேர்ந்த 2.73 இலட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இத்திட்டம் மூலம் 6569 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்.  அதோடு இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் உயர்கல்விக்கு செல்லும் மாணவிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  

கடந்த ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில் மட்டும் பயின்ற மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.  ஆனால் 2024-2025 ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பதை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments