காஞ்சிபும் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவக் கருத்தரங்கம்
படவிளக்கம்: கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு முதலுதவி செய்வது தொடர்பாக நடைபெற்ற பயிற்சி
காஞ்சிபுரம், ஜூலை 19-
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவக் கருத்தரங்கம் மற்றும் முதலுதவி பற்றிய இணையதள விளக்க காட்சியும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் செயல்பட்டு வரும் மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் கருத்தரங்க கூடத்தில் வளர்ந்து வரும் மருத்துவம் மற்றும்பல்துறை ஆய்வுகள் பற்றிய தேசிய மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கே.வி.ராஜசேகர் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கண்காணிப்பாளர் க.பூபதி முன்னிலை வகித்தார். கருத்தரங்கின் தொடக்க நிகழ்வாக கல்லூரியின் நிறுவனர் ஏ.என்.ராதா கிருஷ்ணன் நினைவக ஆய்வுக் கூடத்தில் அவசர சிகிச்சை வகுப்பு பயிற்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் சவீதா மருத்துவக் கல்லூரியின் உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த மருத்துவர் ஏழுமலை மற்றும் மத்திய ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானிகளால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இப்பயிற்சி வகுப்பில் 69 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கருத்தரங்கில் பல் அறிவியல்,மருத்துவ அறிவியல், இணை சுகாதார அறிவியல்,யோகா அறிவியல், மருந்து அறிவியல், மனித நேய அறிவியல், தொழில் சார் சிகிச்சை, உடற்பயிற்சி சிகிச்சை, செவிலியல் உள்ளிட்ட 9 தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் பங்கேற்ற பிரதிநிதிகளால் 30 மருத்துவ அறிவியல் கட்டுரைகள், 25 மருத்துவ அறிவியல் சார்ந்த சுவரொட்டிகள் ஆகியனவும் சமர்ப்பிக்கப்பட்டது.
No comments
Thank you for your comments