உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரத ஊர்வலம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் இன்று (19.07.2024) உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தினத்தில், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதம் மற்றும் மருத்துவ செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது.
மேலும் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.கோபிநாத், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.பி.மலர்விழி, துணை இயக்குநர் (காசநோய்) மரு.காளீஸ்வரி, அரசு அலுவலர்கள், மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments