Breaking News

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் பால்க்குட ஊர்வலம்



படவிளக்கம்: காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலிலிருந்து காளிகாம்பாள் கோயிலுக்கு பால்க்குடம் எடுத்து வந்த மகளிர்

காஞ்சிபுரம், ஜூலை 19-

காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி 108 பால்க்குட ஊர்வலம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி எனப்படும் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை மற்றும் 25 வது ஆண்டு விழாவையொட்டி 108 பால்க்குட ஊர்வலம் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலிலிருந்து பால்க்குடங்கள் புறப்பட்டு ராஜவீதிகள் வழியாக சென்று காளிகாம்பாள் கோயிலுக்கு வந்து சேர்ந்தது.

பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஒரிக்கை பகுதி விஸ்வகர்ம சமதாயத்தினர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஜெ.ப.பூவழகி, ஆலய அறங்காவலர் ரவி என்ற ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.


No comments

Thank you for your comments