“மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் கலைஞரின் கனவு இல்லம் வீடு ஆணை வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், அத்திவாக்கத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு பட்டா நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், அத்திவாக்கத்தில் இன்று (18.07.2024) நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு பட்டா நகல் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோரால் வழங்கப்பட்டது.
மேலும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், காரை ஊராட்சியில் ரூ.8.8 இலட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கப்படும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, ஊராட்சியில் ரூ.9.98 இலட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினையும் பார்வையிட்டு, ஊராட்சியில் ரூ. 28.83 இலட்சம் (ஒன்றிற்கு ரூ.480540/-) கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் குடியிருப்புகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
தொடர்ந்து வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் அத்திவாக்கம்-சூரைமேனிகுப்பத்தில் 1.39 கோடி மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள தார் சாலையின் தரத்தினை பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
இவ் ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.ஆர்.கே.தேவேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்,
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments