Breaking News

பள்ளி மேலாண்மைக்குழு - மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் தகவல்

  


பள்ளி மேலாண்மைக்குழு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.


அனைத்து  அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும் பள்ளிச் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009ன்படி ஏற்படுத்தப்பட்ட குழுவே பள்ளி மேலாண்மைக் குழுவாகும்.  அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

Ø  அரசாணை நிலை எண் 144, பள்ளிக் கல்வித்துறை (SSA1) நாள். 28.06.2024ன்படி பள்ளி மேலாண்மைக் குழுவினை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மறுகட்டமைப்பு செய்வது அவசியமாகும். 

 

Ø  அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவினை மறுகட்டமைப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட  அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Ø  அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பள்ளி மேலாண்மைக்குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 02.08.2024  வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்பட  உள்ளது.

 

Ø  இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு தொடர்பான முதலமைச்சரின் காணொலி மற்றும்  பிற காணொலிப் படங்களைப் பெற்றோர்கள் பார்க்கச் செய்தல் மற்றும் கல்வித் துறை  மூலம் வெளியிடப்படும்  பிரசுரங்கள்  வழங்கபட உள்ளது.

 

Ø  இக்கூட்டத்தில் பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக்குழு (உறுப்பினர்களின் தேர்வு) மறு கட்டமைப்பு நிகழ்வில் பெற்றோர்கள் கலந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கமாக எளிய முறையில் தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்கபட உள்ளது.

 

Ø  தலையமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 02.08.2024  வெள்ளிக்கிழமை  பள்ளிக்கு வர கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.  பள்ளி மேலாண்மைக்குழு  சார்ந்த கூட்டம் மட்டுமே அன்று நடைபெற உள்ளது.  அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை.

Ø  பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செய்யும்போது பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு  உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

அரசாணை எண்.144 நாள்.28.06.2024ன்படி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் விவரம்:

வ. எண்

வகை

எண்ணிக்கை

பதவி

முன்னுரிமை

1

பெற்றோர்

1

தலைவர்

பெண்

2

பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களாக உள்ள தூய்மை பணியாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் திருநங்கைகள் அல்லது SC/ST வகுப்பைச் சார்ந்த குழந்தையின் பெற்றோர்

1

துணைத் தலைவர்

 

3

தலைமையாசிரியர்

1

ஒருங்கிணைப்பாளர் (Convenor)

பெண்-1

4

ஆசிரியர் பிரதிநிதி

1

உறுப்பினர்

 

5

பெற்றோர் பிரதிநிதிகள் (SC,ST. மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் உட்பட)

12

உறுப்பினர்

பெண்கள் -7

6

உள்ளாட்சிப் பிரதிநிதிகள்

2

உறுப்பினர்

பெண்-1

7

கல்வி ஆர்வலர் / புரவலர்/ அரசு சாரா அமைப்பினர் / ஓய்வு பெற்ற ஆசிரியர்

1

உறுப்பினர்

 

8

சுய உதவிக்குழு உறுப்பினர் (பெற்றோர்)

1

உறுப்பினர்

பெண்-1

9

முன்னாள் மாணவ உறுப்பினர்

3

உறுப்பினர்

 

10

முன்னாள் மாணவர் (பொது)

1

உறுப்பினர்

 

 

மொத்தம்

24

 

 

மொத்தம் உறுப்பினர்களில் 75அதாவது 18 உறுப்பினர்கள் பெற்றோர்களாக இருக்க வேண்டும். அவர்களுள் குறைந்தபட்சம் 12 பெண் உறுப்பினர்கள் கட்டாயமாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

 

Ø  மேற்குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தினை சிறப்பாக நடத்திட அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களும், கூட்டம் நடத்துவது தொடர்பாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட /   வட்டாரக்  கல்வி   அலுவலர்களும்   கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்   என

       மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள்                    தெரிவித்துள்ளார்கள்.

 

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments