பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆட்சியர் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் பி.செந்தில்குமார், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று (20.07.2024) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் பி.செந்தில்குமார், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சி மற்றும் பழையசீவரம் ஊராட்சியில் வனத்துறை சார்பில், தமிழ்நாடு உயிர் பண்ணை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மரகதப் பூஞ்சோலையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அவ் இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்பு பழையசீவரம் ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் குளம் வெட்டும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனை தொடர்ந்து உத்திரமேரூர் ஒன்றியம், வளத்தோடு கிராமத்தில், வேளாண்மை துறை சார்பில், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பயிரிட்டுள்ள தக்கைப் பூண்டு செடியினை பார்வையிட்டு, விவசாயிகளிடம் விவசாய பணிகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
மேலும் மானாம்பதி ஊராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய சுகாதார நிலையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இவ் ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், மாவட்ட வன அலுவலர் திரு. ரவி மீனா, இ.வ.ப., வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.ரா.ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments