Breaking News

6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தும், மூன்று மாநில ஆளுநர்களை மாற்றியும் உத்தரவிட்டுள்ளார். 


இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 

பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித்தின் ராஜினாமாவை இந்திய குடியரசுத்தலைவர்  ஏற்றுக்கொண்டார்.

கீழ்க்கண்ட ஆளுநர்களை நியமிப்பதில் குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி அடைகிறார்:-

(i) ஸ்ரீ ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே, ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

(ii) தெலங்கானா ஆளுநராக திரு ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டார்.

(iii) திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

(iv) திரு. சந்தோஷ் குமார் கங்வார், ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

(v) சத்தீஸ்கர் ஆளுநராக திரு. ராமன் டேகா நியமிக்கப்பட்டார்.

(vi) திரு சி.ஹெச்.விஜயசங்கர், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

(vii) ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, தெலங்கானா ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

(viii) அசாம் ஆளுநர் திரு. குலாப் சந்த் கட்டாரியா , பஞ்சாப் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

(ix) சிக்கிம் ஆளுநர் திரு லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் மணிப்பூர் ஆளுநரின் கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நியமனங்கள் அவரவர் பொறுப்பேற்கும் தேதிகளில் இருந்து நடைமுறைக்கு வரும்.  என குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


No comments

Thank you for your comments